பருத்தி ஏலம் ரத்து செய்யப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம்
மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் ரத்து செய்யப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் ரத்து செய்யப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். ஆனால் நேற்று பருத்தி ஏலம் நடைபெறாது என ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் பருத்தி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு கொள்முதல் செய்த பயறு, உளுந்தை அரவைக்கு அனுப்பாததால் குடோன்களில் 8 ஆயிரம் டன் தேங்கி கிடக்கிறது.
பருத்தி ஏலம் ரத்து
நிர்ணயம் செய்த அளவை விட அதிக அளவில் பயறு, உளுந்தை கொள்முதல் செய்ததால் தேக்கம் அடைந்துள்ளதாகவும், பருத்தியை வைக்க குடோன்களில் இடமில்லாததால் பருத்தி ஏலம் தற்காலிகமாக நடைபெறாது என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைெபறும் ஏலத்தில் பருத்திக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகள், ஏலம் ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்