விவசாயிகள் மாற்று உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்


விவசாயிகள் மாற்று உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்
x

குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மாற்று உரங்களை பயன்படுத்தி அதிக மசூல் பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மாற்று உரங்களை பயன்படுத்தி அதிக மசூல் பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

குறுவை சாகுபடி

நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அகண்டராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு 35 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நேரடி விதைப்பாக 25 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நெற்பயிர்கள் தற்போது வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த ்நிலையில் மேலுரமாக ஏக்கருக்கு 22.5 கிலோ யூரியா, 50 கிலோ டி.பி.ஏ. உரம் தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த உரங்களுக்கு பதிலாக மாற்று உரங்களை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.

மாற்று உரங்கள்

யூரியாவிற்கு மாற்றாக நானோ யூரியா ஒரு ஏக்கருக்கு 500 மி.லி. தெளிக்கலாம். டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் கூட்டு உரங்களை தெளிக்கலாம். பொட்டாஷ் உரத்திற்கு மாற்றாக ஆலைக்கழிவு மூலம் பெறப்படும் பொட்டாஷ் உரத்தை இடலாம். நெற்பயிருக்கு தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய சத்துக்கள் மாற்று உரங்களில் இருப்பதால் தற்போது அனைத்து தனியார் உரக்கடைகளிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் மாற்று உரங்களை உரிய முறையில் பயன்படுத்தி, அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.


Next Story