பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம் - வேளாண் அதிகாரி தகவல்
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் தகுதி உடைய விவசாயிகள் பயன் பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பு பருவமான சம்பா, நிலக்கடலை மற்றும் கரும்பு பருவத்திற்கு மத்திய அரசின் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகள் விண்ணப்பித்து பலன் பெறலாம். குத்தகைக்கு பயிர் செய்யும் விவசாயிகளும் இத்திட்டதில் பயன் பெறலாம்.
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி தகவல்களுடன் கூடிய வங்கி புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சிட்டா நடப்பு சாகுபடி அடங்கல், முன் மொழிவு படிவம் மற்றும் விவசாயி பதிவு படிவம் ஆகியவற்றுடன் கீழ்க்கண்ட காப்பீட்டு பிரீமியத் தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தி காப்பீடு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் விரிவான விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவர்களை தொடர்பு கொள்ளலாம். குறிப்பிட்ட காலக்கெடு விற்குள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் பிரீமியம் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.