உளுந்து, பயறு சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம்
தலைஞாயிறு பகுதியில் நெல் அறுவடைக்குப்பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என தலைஞாயிறு வேளாண்ைம உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
வாய்மேடு:
தலைஞாயிறு பகுதியில் நெல் அறுவடைக்குப்பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என தலைஞாயிறு வேளாண்ைம உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
5 ஆயிரம் ஏக்கர் இலக்கு
தலைஞாயிறு வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நெல் தரிசில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் 4 ஆயிரம் ஏக்கர் உளுந்து மற்றும் பச்சை பயறு பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உளுந்து மற்றும் பச்சைபயறு பயிரிடுவதற்கு தேவைப்படும் உயர் விளைச்சல் தரும் சான்று விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை ஆகியவை மானிய விலையில் கொத்தங்குடி, நீர்முளை, பனங்காடி, தலைஞாயிறு ஆகிய வேளாண்மை கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
குறைந்த நாட்களில் அதிக மகசூல்
விவசாயிகள் நெல் அறுவடைக்கு பின் பயறு வகை பயிர்களை பயிரிடுவதன் மூலம் மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. இதை சாகுபடி செய்வதால் குறைந்த நாட்களில் விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கிறது.
தலைஞாயிறு பகுதியில் தற்போது நெல் அறுவடை பணிகள் நிறைவு பெறும் நிலையில், உளுந்து, பயறு சாகுபடி செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.