தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை


தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
x

வத்திராயிருப்பு பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

விலை குறைவு

விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்தி கோவில், புதுப்பட்டி, மகாராஜபுரம், மாத்தூர், தாணிப்பாறை, கூமாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பகுதிகளில் நெல், தென்னை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ரூ.10-க்கு தேங்காய் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.7-க்கு மட்டுமே கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். விலை குறைவால் பெரும்பாலான விவசாயிகள் தேங்காய் பறிக்காமல் மரத்திலேயே விட்டுள்ளனர்.

கிலோ ரூ.70

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் தேங்காய் விருதுநகர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது வெளி மாநிலங்களில் தேங்காய் தேக்கம் அடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க கொப்பரை தேங்காய் விலையும் வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது. கிலோ ரூ.100 வரை வாங்கப்பட்ட கொப்பரை தேங்காய் தற்போதுரூ. 70-க்கு விற்பனை ஆகிறது. நாங்கள் தனியாரிடம் தான் தேங்காய்களை விற்பனை செய்கிேறாம்.

கொள்முதல் நிலையம்

வத்திராயிருப்பு பகுதியில் மாவட்ட நிர்வாகம் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தை திறந்தால் நல்ல விலைக்கு கொள்முதல் செய்ய முடியும். ஆனால் இன்னும் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் உள்ளது.

தேங்காய் விலை வீழ்ச்சிக்கான காரணம் குறித்து அரசு ஆராய வேண்டும். விவசாயி களிடமிருந்து தேங்காயை நல்ல விலைக்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story