கருகிய பயிர்களுக்கு திதி கொடுத்து விவசாயிகள் போராட்டம்


கருகிய பயிர்களுக்கு திதி கொடுத்து விவசாயிகள் போராட்டம்
x

தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கருகிய பயிர்களுக்கு திதி கொடுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிவாரணம் வழங்கக்கோரி இந்த போராட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கருகிய பயிர்களுக்கு திதி கொடுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிவாரணம் வழங்கக்கோரி இந்த போராட்டம் நடந்தது.

கருகிய பயிர்களுக்கு திதி கொடுத்தனர்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நேற்று காலை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமை தாங்கினார்.

தரையில் வாழை இலையை போட்டு, பச்சரிசி, காய்கறிகள், பழங்கள் வைத்து கருகிய பயிர்களுக்கு மந்திரங்கள் முழங்க திதி கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிவாரணம் வழங்க கோரிக்கை

போராட்டத்தில், கருகிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்த நிறுத்த வேண்டும். கூட்டுறவு வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நூதன போராட்டம் நடத்தப்பட்டது.

இது குறித்து சுகுமாறன் கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 205 டி.எம்.சி.தண்ணீரை பெற்றுத்தர வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500-மும், பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரமும் வழங்க வேண்டும் என்றார்.


Next Story