34,564 விவசாயிகள் ஆதாரை இணைக்கவில்லை


34,564 விவசாயிகள் ஆதாரை இணைக்கவில்லை
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிஷான் சம்மான் நிதியுதவி திட்டத்தில் 34 ஆயிரத்து 564 விவசாயிகள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகமது அஸ்லம் கூறினார்.

கிருஷ்ணகிரி

கிஷான் சம்மான் நிதியுதவி திட்டத்தில் 34 ஆயிரத்து 564 விவசாயிகள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகமது அஸ்லம் கூறினார்.

இணை இயக்குனர் ஆய்வு

கிருஷ்ணகிரி வட்டாரம் மாதேப்பட்டி கிராமத்தில் பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதியுதவி (பி.எம். கிசான்) திட்டத்திற்காக கே.ஒய்.சி. எனப்படும் ஆதார் மூலம் பயனாளிகளுக்கு நிதியுதவி சென்று சேர்வதை உறுதிப்படுத்தும் பணியை வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி மாதேப்பட்டி கிராமத்தில் மக்கள் கணினி மையத்தில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகமது அஸ்லம் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண் கொண்டு ஓ.டி.பி. எனப்படும் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் மூலம் கே.ஒய்.சி. செய்து பி.எம். கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2 ஆயிரம், 13-வது தவணை தொடர்ந்து பெற வேண்டும் என்று அலுவலர்கள் கூறினர். இந்த ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ்குமார், வேளாண்மை அலுவலர் பிரியா, உதவி வேளாண்மை அலுவலர்கள் முத்துசாமி, சிவராசு, முனிராஜி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் வேளாண் இணை இயக்குனர் முகமது அஸ்லம் கூறியதாவது:-

34,564 பேர் இணைக்கவில்லை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 34,564 விவசாயிகள் இன்றைய தேதி வரை தங்கள் ஆதார் எண்ணை பி.எம். கிசான் திட்டத்தில் இணைக்காமல் உள்ளனர். இவர்கள் அடுத்து வரும் 13-வது தவணையை பெற உடனே மக்கள் கணினி மையத்திற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணைக் கொண்டு செல்ல வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் இல்லாதவர்கள் தங்களுடைய கை ரேகை அல்லது கண் கருவிழியை ஸ்கேன் செய்வதன் மூலம் கே.ஒய்.சி. பணியை செய்ய வேண்டும். இது தெடார்பாக கிருஷ்ணகிரி வட்டாரத்தில் உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story