தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை


தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
x

தஞ்சை அருகே கோர்ட்டு தீர்ப்புக்கு பயந்து தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

வல்லம்;

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியன் (வயது 50). விவசாயியான இவர் மீது குற்ற வழக்கு பதிவாகி அந்த வழக்கு தஞ்சை கோர்ட்டில் நடைபெற்று வந்துள்ளது.

இந்தநிலையில் நீதிமன்ற தீர்ப்புக்கு பயந்த முனியன் நேற்று காலை கோர்ட்டுக்கு செல்லாமல் அவருடைய வீட்டின் அருகில் உள்ள குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் செங்கிப்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட முனியனின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story