மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி


மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
x

திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்:

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள துறவிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 76) விவசாயி. இவர் சம்பவத்தன்று துறவிக்காடு கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது புனல்வாசல் முருகன் தெருவைச் சேர்ந்த சபரிநாத் (20) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் ஆறுமுகத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில், திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story