பாம்பு கடித்து விவசாயி பலி
தேசூர் அருகே பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை
சேத்துப்பட்டு
தேசூரை அடுத்த பருவதம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48), விவசாயி. இவருக்கு சசிகலா என்ற மனைவியும், அர்ஜுன் என்ற மகனும், அஸ்வினி, காவியா ஆகிய மகள்கள் உள்ளனர்.
ரமேஷ் விவசாய நிலத்துக்கு சென்று விட்டு சுப்பிரமணி என்பவரின் நிலத்தின் வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பாம்பு அவரை கடித்து விட்டது.
இதில் அவர் மயங்கி கீேழ விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாய்ராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story