மலைத்தேனீக்கள் கொட்டியதில் விவசாயி சாவு


மலைத்தேனீக்கள் கொட்டியதில் விவசாயி சாவு
x

நொய்யல் அருகே மலைத்தேனீக்கள் கொட்டியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

கரூர்

மலைத்தேனீக்கள்

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 63). விவசாயி. இவரது தோட்டம் செல்வநகர் பகுதியில் உள்ளது. இங்குள்ள தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தன. மேலும் அந்த வழியாக செல்பவர்களை மலைத்தேனீக்கள் அச்சுறுத்தி வந்தன.

இந்தநிலையில் ராமசாமி நேற்று தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை மலைத்தேனீக்கள் கொட்டின. இதில் வலி தாங்க முடியாமல் ராமசாமி அருகே இருந்த கிணற்றில் குதித்துள்ளார். பின்னர் சிறிதுநேரம் தண்ணீருக்குள் மூழ்கி இருந்து விட்டு மூச்சு தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் கிணற்றின் மேலே ஏறி வந்தார்.

விவசாயி சாவு

அப்போது அங்கு சுற்றி இருந்த 100-க்கும் மேற்பட்ட மலைத்தேனீக்கள் ராமசாமியை கொட்டின. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மயங்கி கிடந்த ராமசாமியை மீட்டு வேலாயுதம்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலைத்தேனீக்கள் ெகாட்டியதில் விவசாயி இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story