மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை


மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 9 March 2023 12:15 AM IST (Updated: 9 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள சொலவம்பாளையம் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் தன்னாசி(வயது 51). விவசாயி. இவருடைய மனைவி கோமளா (38). இவர்களுக்கு 3½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் தன்னாசிக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. வீட்டுக்கு அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் தன்னாசி, கடந்த 5-ந் தேதி இரவில் தனது தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு விஷத்தை மதுவில் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை தேடி கோமளா அங்கு வந்தார். அப்போது தன்னாசி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உறவினர்கள் உதவியுடன் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் தன்னாசி நேற்று முன்தினம் இரவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story