விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 30), விவசாயி. இவரது மனைவி இளம்மொழி. இந்தநிலையில் வினோத் தனக்கு தெரிந்தவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இளம்மொழி தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து, வினோத்குமார் தனது மனைவியை வீட்டிற்கு வரும் படி அழைத்து உள்ளார். ஆனால் அவர் வர மறுத்ததால் மனவேதனை அடைந்த வினோத், பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வினோத் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story