429 ஊராட்சிகளில் நாற்றங்கால் பண்ணை, குறுங்காடுகள்


429 ஊராட்சிகளில் நாற்றங்கால் பண்ணை, குறுங்காடுகள்
x

நாற்றங்கால் பண்ணை, குறுங்காடுகள் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் வலியுறுத்தி உள்ளார்.

ராமநாதபுரம்

அரியனேந்தல்,

பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரியனேந்தல் ஊராட்சியில் உள்ள பூங்கா நகர் பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தேசியஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டு வருவதையும் குறுங் காடுகள் உருவாக்கி அதில் தேனீக்கள் வளர்ப்பதையும் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டார். பின்னர் நாற்றங்கால் பண்ணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்கள் உள்ள பகுதிகளை சுற்றி காய்கறி தோட்டங்கள் உருவாக்கி பயன்பெற அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாற்றங்கால் பண்ணையின் மூலம் முருங்கை கருவேப்பிலை பயிரிட்டு அதன் மூலம் வருமானம் கிடைக்கும். மேலும் மல்லிகை பூ, செவ்வந்திப் பூ நாவல் பல கன்று, பப்பாளி உள்ளிட்ட கன்றுகள் வளர்த்து குறுகிய காலத்தில் நாம் பெறலாம். பொதுமக்களும் அவைகளை ஆர்வமுடன் வங்கி பயன்பெற ஏதுவாக இருக்கும். எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் நாற்றங்கால் பண்ணை அமைத்து அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கவும் அரசு இடங்களில் குறுங்காடுகள் அமைத்து பராமரித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா, கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரமோகன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story