தூத்தூரில் ரசிகர்கள் கொண்டாட்டம்


தூத்தூரில் ரசிகர்கள் கொண்டாட்டம்
x

கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜென்டினா வெற்றி: தூத்தூரில் ரசிகர்கள் கொண்டாட்டம்

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

குமரி மாவட்ட தூத்தூர் மண்டல மீனவ கிராமத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கால்பந்தாட்டப்போட்டி ரசித்து பார்த்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கால்பந்தாட்ட அணிகளில் தலைசிறந்த வீரர்களாக விளையாடி வருகிறார்கள். தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியை ஒவ்வொரு ஊரிலும் பொது வெளியில் பெரிய திரை அமைத்து கண்டு களித்து மகிழ்ந்து வந்தனர். தங்களது தலைசிறந்த வீரர்கள் விளையாடும் போட்டிகளை வானவேடிக்கைகள் நடத்தி உற்சாகமாக கொண்டாடினர். நேற்று முன்தினம் அனைத்து கிராம மக்களின் விருப்பமான வீரர் மெஸ்ஸியின் அணியான அர்ஜென்டினா தனது அரை இறுதி போட்டியை குரோஷியா அணியுடன் விளையாடியது. இந்த போட்டியை காண தூத்தூர் மண்டல பகுதி மீனவ மக்கள் நேற்றுமுன்தினம் மாலை முதலே மிகவும் ஆர்வமுடன் இருந்தனர். நள்ளிரவில் போட்டி ெதாடங்கியதும் ஆரவாரத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அர்ஜென்டினா அணி குரோஷியா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதை ஆடிப்பாடி பட்டாசுகள் வெடித்தும் வானவேடிக்கை நடத்தியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் தூத்தூர் மீனவ கிராமம் விழாக்கோலம் பூண்டது போல் காட்சி அளித்தது.


Next Story