வெற்றிலை விலை வீழ்ச்சி


வெற்றிலை விலை வீழ்ச்சி
x

வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கரூர்

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். பின்னர் வெற்றிலை விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.10 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.5ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் சுமை ஒன்று ரூ.5ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.2500-க்கும் விற்பனையானது.

நேற்று வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று 2ஆயிரத்துக்கும் வாங்கிச் சென்றனர்.

வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story