போலி சான்றிதழ் தயாரித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முயன்ற போலி டாக்டர் கைது


போலி சான்றிதழ் தயாரித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முயன்ற போலி டாக்டர் கைது
x

போலி சான்றிதழ் தயாரித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முயன்ற போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

தர்மபுரி மாவட்டம், நிலஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 30). இவர் ஓமியோபதி படித்து விட்டு அதே பகுதியில் சொந்தமாக கிளினிக் நடத்தி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் சந்தோஷ்குமார் வந்துள்ளார். அங்கு அவர் சில சான்றிதழ்களை சமர்பித்து மருத்துவராக பதிவு செய்ய விண்ணப்பித்து உள்ளார். அப்போது சந்தோஷ்குமார் சமர்பித்த எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப்பு உள்ளிட்ட சான்றிதழ்களில் ஊழியர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சான்றிதழை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவாளர் சண்முகம் ஆய்வு செய்ததில் அவை அனைத்தும் போலி என தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக சந்தோஷ்குமாரை பிடித்து அரும்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அரும்பாக்கம் போலீசார் சந்தோஷ்குமார் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story