மயங்கி விழுந்து தொழிலாளி சாவு
மயங்கி விழுந்து தொழிலாளி சாவு
தஞ்சாவூர்
திருக்காட்டுப்பள்ளி:
திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடி கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் இருந்து லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி அனுப்பப்படுகிறது. இந்த மணல் குவாரியில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் காமராஜர் வீதியை சேர்ந்த ரவி (வயது47) என்பவர் வேலைபார்த்து வந்தார். நேற்று காலை இவர் வேலைபார்த்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ரவியின் மகன் மோகனசுதன் (21) கொடுத்த புகாரின் பேரில் தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யா பிள்ளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story