கண் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்-கண்காட்சி


கண் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்-கண்காட்சி
x

கண் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்-கண்காட்சி நடைபெற்றது.

திருச்சி

உலகம் முழுவதும் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி அரசு மருத்துவமனையில் கண் அழுத்த நோய் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனை டீன் நேரு, கண்காணிப்பாளர் அருண்ராஜ் ஆகியோர் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஊர்வலம் மருத்துவமனை வளாகத்துக்குள் சென்று அங்கு அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்கிற்கு வந்து சேர்ந்தது. கண்காட்சி அரங்கில் கண் அழுத்த நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், இந்த நோயை சரி செய்வதற்கான வழிமுறைகள், இயல்பாக கண்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்த பல்வேறு விளக்க படங்கள், செயல்முறை விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இதனை மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர். பின்னர் டீன் நேரு நிருபர்களிடம் கூறுகையில், "பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண் அழுத்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் கட்டாயம் மருத்துவமனையை நாடி பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்து கொண்டால் இந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம்" என்றார்.


Next Story