கண் பரிசோதனை முகாம்


கண் பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் வாகன ஓட்டிகளுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.

தென்காசி

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தென்காசி போக்குவரத்து போலீஸ் பிரிவு, தென்காசி கேன்சர் சென்டர், பிரோ விஷன் கண் மருத்துவமனை மற்றும் குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்கம் ஆகியன சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் வாகன ஓட்டிகளுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் (சட்டம் ஒழுங்கு) பாலமுருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேன்சர் சென்டர் நிறுவனர் டாக்டர் சிவச்சந்திரன், இயக்குனர் டாக்டர் அருணா சந்திரசேகரன், கண் மருத்துவமனை டாக்டர் ராஜகுமாரி ஆகியோர் வாகன ஓட்டிகளுக்கு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் கண் பரிசோதனை ஆகியவற்றை செய்தனர்.

புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. முகாமில் மெட்ரோ ரோட்டரி சங்க தலைவர் வக்கீல் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் முருகன் ராஜ், டாக்டர் ராஜகுமார், ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கேன்சர் சென்டர் டாக்டர் சிவச்சந்திரன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story