கண் பரிசோதனை முகாம்
கண் பரிசோதனை முகாம் நடந்தது
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை விலக்கு ஆவே மரியா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பள்ளி தாளாளர் பீட்டர்ராஜ் தலைமை தாங்கினார். துணை முதல்வர் பிரின்சஸ் முன்னிலை வகித்தார். ஆசிரியை சுனிதா வரவேற்றார். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் குழுவினர் டாக்டர்கள் இந்திரா சுந்தரி, தர்சன்ராஜ், ஹெப்ஸி, ராகுல்குமார், ரெனிஷா பேபி, தஸ்னி ஆகியோர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கு கண் பரிசோதனை நடத்தி, ஆலோசனை வழங்கினர். தேவையான மாணவர்களுக்கு கண் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆசிரியர்கள் உமா, சாந்தி, முத்துமாரி மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியை ராஜம்மாள் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story