கண் பரிசோதனை முகாம்


கண் பரிசோதனை முகாம்
x

மானூர் அருகே கண் பரிசோதனை முகாம்

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே அழகியபாண்டியபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் அங்குள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வளாகத்தில் நடந்தது. அங்கு ஐ.ஓ.பி. வங்கி தொடங்கி பத்தாவது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு இந்த முகாம் நடைபெற்றது. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை நெல்லை மருத்துவ கல்வி நிறுவனம் மற்றும் ஐ.ஓ.பி. இணைந்து இந்த முகாமை நடத்தினர். அழகியபாண்டியபுரம் மேலாளர் சிட்டிபாபு தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் வேலம்மாள் ஆனந்த், யூனியன் கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சிட்டிபாபு பேசும்போது, இப்பகுதி மக்களுக்கு விவசாயம் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு விவசாயம், வீட்டுக்கடன் என ரூ.1.52 கோடி கடன் வழங்கி உள்ளோம். இப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் உயர உறுதுணையாய் இருப்போம், என்றார்.

முகாமில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் கண் பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில் அழகியபாண்டியபுரம் பஞ்சாயத்து துணை தலைவர் மாணிக்கம் நன்றி கூறினார்.


Next Story