முகநூலில் நட்பாக பழகி வாலிபரிடம் பணம் பறிப்பு - 2 பேர் கைது


முகநூலில் நட்பாக பழகி வாலிபரிடம் பணம் பறிப்பு - 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 5:42 PM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்குறிச்சி அருகே முகநூலில் நட்பாக பழகி வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

தென்காசி

கடையம்:

நெல்லை மாவட்டம் அம்பை என்.ஜி.ஓ. காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் ராஜராஜேஸ்வரன் (வயது 25). இவரும், ஆழ்வார்குறிச்சி கணபதி தெருவை சேர்ந்த செய்யது இப்ராஹிம் மகன் பீர்முகமது (19) என்பவரும் முகநூலில் நட்பாக பழகி வந்தனர். இந்த நிலையில் ராஜராஜேஷ்வரனை நேரில் வருமாறு பீர்முகமது அழைத்து உள்ளார். அதன்படி, சம்பவத்தன்று இரவு ஆழ்வார்குறிச்சி அருகே அடைச்சாணி அணைக்கட்டு அருகே வந்த ராஜராஜேஷ்வரனை பீர்முகமதுவும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் சேர்ந்து மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அதற்கு ராஜராஜேஸ்வரன் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதையடுத்து ராஜராஜேஸ்வரனின் செல்போனை பிடுங்கி, அதிலிருந்து ஜிபே மூலம் ரூ.5 ஆயிரத்தை தங்களது ஜிபே கணக்குக்கு மாற்றி உள்ளனர்.

இதுகுறித்து ராஜராஜேஸ்வரன் ஆழ்வார்குறிச்சி ேபாலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீர்முகமது உள்பட 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story