2011-ம் ஆண்டுக்கு முன்பு அனுமதியில்லாத கல்வி கட்டிடங்களுக்கு அனுமதி பெற காலஅவகாசம் நீட்டிப்பு


2011-ம் ஆண்டுக்கு முன்பு அனுமதியில்லாத கல்வி கட்டிடங்களுக்கு அனுமதி பெற காலஅவகாசம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 1:16 PM IST)
t-max-icont-min-icon

2011-ம் ஆண்டுக்கு முன்பு அனுமதியில்லாத கல்வி கட்டிடங்களுக்கு அனுமதி பெற காலஅவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இந்த துறையால் அனுமதி வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அனுமி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக பல்வேறு கட்டமாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில்இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக வருகிற 30-ந் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் உரிய விவரங்களை சமர்ப்பித்து இசைவு பெற சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://tcp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இதுவே இறுதி வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story