உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை


உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கைகளை  விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை
x

உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை

திருவாரூர்

உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.

ஒன்றியக்குழு கூட்டம்

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய துணை தலைவர் ரா.ஞானசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆதி.ஜனகர், பாரதிமோகன் ராஜா, மேனகா கார்த்திகேயன் உள்ளிட்ட 19 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

கருணாநிதிக்கு உருவச்சிலை

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நூற்றாண்டு நுழைவுவாயில் அமைத்து அதில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவச்சிலை அமைக்க வேண்டும். வடுவூரை தலைமையிடமாகக்கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:-

சாந்தி: எடஅன்னவாசல் பகுதியில் அடிப்படை சாலைவசதி செய்து தர வேண்டும். புதிய மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி கட்டிடம் கட்ட வேண்டும். புதிய பள்ளிக்கட்டிடம் கட்ட வேண்டும்.

துரைசிங்கம்: செருமங்கலம் உடையார்தெரு மயான சாலை அமைக்க வேண்டும்.

வடுவூரை தலைமையிடமாக கொண்டு

ராஜலட்சுமி: சேகரை நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

மேனகா கார்த்திகேயன்: நீடாமங்கலம் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து வடுவூரை தலைமையிடமாகக்கொண்டு ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்திட வேண்டும்.

பொன்னுசாமி: வடுவூர் சாத்தனூர் பகுதியில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

பாரதிமோகன்: பூவனூர் ஊராட்சியில் அக்ரஹாரம் ஆதிதிராவிடர் தெருவிற்கு தார்ச்சாலை அமைத்துத்தரவேண்டும். பூவனூர் கிராமத்திற்கு ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டித்தர வேண்டும். பெரம்பூர், முல்லைவாசல், கண்ணம்பாடி மயான கொட்டகைகளை சீரமைக்க வேண்டும்.

சத்தியவாணன்: அதங்குடி பகுதியில் அரசுக்குச்சொந்தமான பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும். கோரையாற்றில் படித்துறைகள் கட்ட வேண்டும்.

ஆதிஜனகர்: சோனாப்பேட்டையில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட வேண்டும். காளாச்சேரி சோனாப்பேட்டை இணைப்புச்சாலை அமைக்க வேண்டும்.காளாச்சேரி-நாவல்பூண்டி சாலை அமைக்க வேண்டும்.

நிறைவேற்ற நடவடிக்கை

தலைவர்: உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் நமசிவாயம் நன்றி கூறினார்.


Next Story