விவசாயிகள் எதிர்பார்ப்பு


விவசாயிகள் எதிர்பார்ப்பு
x

வடபாதிமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

வடபாதிமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெண்ணாற்றின் குறுக்கே தடுப்பணை

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் புனவாசல் என்ற இடத்தில் அந்த பகுதி விவசாயிகளின் பயன்பாட்டிற்காக 50 ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் தடுப்பணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் வெண்ணாற்றின் கரையோரத்தில் உள்ள பாசன வாய்க்கால் வழியாக புனவாசல், மாயனூர் போன்ற கிராமங்களில் உள்ள வயல்களுக்கு செல்கிறது.

இடிந்து விழுந்தன

இதனால் நெல், உளுந்து, பயறு, பருத்தி போன்ற பயிர்களை அந்த பகுதி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக தடுப்பணையின் நடுவில் விரிசல்கள் ஏற்பட்டு இடிந்து விழுந்தன.

இதனால் தடுப்பணையையொட்டி முறையாக தேங்கி நிற்க வேண்டிய தண்ணீர் இடிந்த இடத்தின் வழியாக சென்று விடுகிறது. இதனால் பாசன வாய்க்காலில் போதுமான அளவில் தண்ணீர் செல்வதில் குறைபாடு உள்ளது. ேமலும் விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது என அந்த பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படு்ம் அபாயம்

கடந்த சில ஆண்டுகளாக கோடை காலங்களில் முறையாக தேங்கி நிற்க வேண்டிய தண்ணீரும் ஆற்றில் நிற்பதில்லை. இதனால் கடுமையான வெயில் காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் சேதமடைந்த தடுப்பணை பலம் இழந்து முழுவதும் பழுதடையும் நிலையில் காணப்படுகிறது. எனவே சேதமடைந்த தடுப்பணையை அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக தடுப்பணை கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story