தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பொருட்கள் கண்காட்சி


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பொருட்கள் கண்காட்சி
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு பொருட்கள் கண்காட்சி நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இனிப்பு, காரங்கள் கொண்ட உணவு பொருட்கள் கண்காட்சி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த கண்காட்சி கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், 'இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர், விற்பானையாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்று பெற்று இருக்க வேண்டும்.

உணவு வணிகர்கள் இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர் அனைவரும் பயன்படுத்திய எண்ணெய்யை 3 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்திய எண்ணெய்யை உணவு பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.நுகர்வோர்களுக்கு வழங்கும் பில்களில் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு எண்ணை பிரிண்ட் செய்து இருக்க வேண்டும்' என்றார்.

கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களுக்கு தீபாவளிக்கு பண்டிகையின் போது தின்பண்டங்கள் வாங்கும் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா, திருவண்ணாமலை உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story