சிறுதானியங்கள் உணவு கண்காட்சி


சிறுதானியங்கள் உணவு கண்காட்சி
x

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் சிறுதானியங்கள் உணவு கண்காட்சி நடைபெற்றது.

நாமக்கல்

மோகனூர்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, சிறுதானிய உணவு கண்காட்சி கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜா தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டு பரிசு வழங்கி பாராட்டினார். கல்லூரி தாவரவியல் துறை தலைவர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் உழவர் ஆனந்த் சிறுதானியங்கள் வளர்ப்பு முறைகள் மற்றும் சத்துக்கள் பற்றி பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி தாவரவியல் துறை மாணவ, மாணவிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து சிறுதானியங்களில் பல்வேறு உணவுகளை தயாரித்து அதனை காட்சிப்படுத்தியிருந்தனர். இதில் பல்வேறு துறையை சார்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறுதானிய உணவு கண்காட்சியை பார்வையிட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் தாவரவியல் துறை இணை பேராசிரியர் வசந்தாமணி நன்றி கூறினார்.


Next Story