கடலோர பாதுகாப்பு படையின் தயார்நிலை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி - இயக்குனர் ஜெனரல் வி.எஸ்.பதானியா ஆய்வு


கடலோர பாதுகாப்பு படையின் தயார்நிலை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி - இயக்குனர் ஜெனரல் வி.எஸ்.பதானியா ஆய்வு
x
தினத்தந்தி 30 July 2022 2:11 AM IST (Updated: 30 July 2022 2:27 AM IST)
t-max-icont-min-icon

கடலோர பாதுகாப்பு படையின் தயார்நிலை குறித்த ஒத்திகை நிகழ்ச்சியை இயக்குனர் ஜெனரல் வி.எஸ்.பதானியா ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிழக்கு பிராந்திய கடலோர பாதுகாப்பு படையின் தயார்நிலை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பல்கள், ஹெலிகாப்டர்களில் இருந்த வீரர்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுதல், மாசு கட்டுப்படுத்துதல், தீயை அணைத்தல் உள்ளிட்ட தங்களது பணிகள் தொடர்பான ஒத்திகையை செய்து அசத்தினார்கள்.

சென்னையை ஒட்டிய வங்கக் கடலில் ஒத்திகை நிகழ்ச்சியை இந்திய கடலோர பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் வி.எஸ்.பதானியா ஆய்வு செய்தார். சமீபத்தில் கடலோர பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்ட அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய 'துருவ் ஏ.எல்.எச். எம்.கே.-3' ரக ஹெலிகாப்டர்கள் மீட்பு கூடை மூலம் தேடுதல் வேட்டையை செய்து காட்டியது கண்கவரும் வகையில் அமைந்தது. ஒத்திகையில் பங்கேற்ற கப்பல்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தும், ஹெலிகாப்டர்கள் புகையை கக்கியவாறும் சென்ற அணிவகுப்புடன் ஒத்திகை நிறைவு பெற்றது.


Next Story