திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக தேர்வு முகாம்
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக தேர்வு முகாம் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது.
உதவி உபகரணங்கள்
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனம் வாயிலாக பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வண்டி மற்றும் சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், சிறப்பு சக்கர நாற்காலி, 3 சக்கர சைக்கிள், நவீன செயற்கை கால் மற்றும் கை, காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகள், ஆகிய உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக தேர்வு முகாம் நடைபெற உள்ளது. முகாமை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திருவள்ளூர் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணைந்து கீழ்க்கண்டவாறு தேர்வு முகாம் நடத்தப்பட உள்ளது.
6 இடங்களில் முகாம்
அதன்படி 23-ந் தேதி திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை வட்டத்தை சேர்ந்தவர்களுக்கு திருத்தணி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியிலும், 25-ந் தேதி பொன்னேரி வட்டத்தில், பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும், 26-ந் தேதி கும்மிடிப்பூண்டி வட்டத்தில், கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 27-ந் தேதி பூந்தமல்லி வட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 30-ந் தேதி ஆவடி வட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஆவடி காமராஜர் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 31-ந் தேதி திருவள்ளூர் வட்டத்தை சேர்ந்தவர்களுக்கு திருவள்ளூர் பெரியகுப்பம் டி.இ.எல்.சி பள்ளியிலும் என 6 இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணி வரை முகாம் நடைபெறும்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.