பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்


பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்
x

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டம் சுமார் 2500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு பிளாஸ்டிக் கழிவுகள், ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி இயற்கை சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையின் முதல் கட்ட முயற்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் 10 மணி வரை 3 மணி நேரத்திற்குள் ஒவ்வொரு பகுதியிலும், குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள், வணிக கடைகளில் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

இப்பணியில் தூய்மைப் பணியாளர்கள், மாணவ- மாணவிகள், சமூக ஆர்வலர்கள், அரசு அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களிடம் பிளாஸ்டிக் குப்பைகளை வழங்க மாவட்டத்தில் உள்ள அனைத்து குடியிருப்பு வாசிகளும், தொழில் நிறுவனங்களும், மளிகை கடை உரிமையாளர்களும் முன்வரவேண்டும்.

மேலும் தங்கள் பகுதியை சுற்றியுள்ள இடத்தை சுத்தம் செய்ய அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இன்று ஒருநாள் இப்பணியை மேற்கொண்டு நமது சுற்றுப்புறத்திற்கும், இயற்கைக்கும், பூமிக்கும், கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story