"சேலம் இளைஞரணி மாநாடு சிறப்பாக நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


சேலம் இளைஞரணி மாநாடு சிறப்பாக நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

“சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாடு சிறப்பாக நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என தென்காசியில் நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தென்காசி

"சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாடு சிறப்பாக நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என தென்காசியில் நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

பொற்கிழி வழங்கும் விழா

தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. சாா்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கட்சியின் மூத்த முன்னோடிகள் 1,560 பேருக்கு பொற்கிழி வழங்கி பேசியதாவது:-

தமிழகத்தில் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தாலும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெறுவதாக இருந்தால் அந்த நிகழ்ச்சிகளில் நான் தவறாமல் கலந்து கொள்வேன். இதுவரை மூத்த முன்னோடிகளுக்கு என் கையால் ரூ.40 கோடி வரை நிதி உதவி வழங்கியுள்ளேன்.

இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் இதுபோன்று செய்ததில்லை. கடந்த 2½ ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஒத்துழைக்க வேண்டும்

மக்களைத்தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம், கல்விக்காக மதுரையில் நூலகம், சென்னையில் உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் பன்னோக்கு மருத்துவமனை என பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதுபோன்ற திட்டங்களை பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்தார் என்றால், அதற்கு காரணம் நீங்கள்தான். அதுபோல சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநாடு சிறப்பாக நடத்துவதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.10 லட்சம் காசோலை

தொடர்ந்து நடைபெற்ற இளைஞர் அணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் இளைஞரணி சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா மற்றும் இளைஞர் அணியினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளருமான செல்லத்துரை, வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன், சிவகிரி பேரூராட்சி தலைவி கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன், சேர்வைக்காரன்பட்டி பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன், கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story