கட்டுரை, பேச்சு போட்டி


கட்டுரை, பேச்சு போட்டி
x

தமிழ்நாடு நாளை முன்னிட்டு கட்டுரை, பேச்சு போட்டி 12-ந் தேதி நடக்கிறது.

ராணிப்பேட்டை

தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967-ம் நாளினை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்த அரசு அறிவித்துள்ளது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் வருகிற 12-ந் தேதி காலை 9.30 மணியளவில் வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் தனித்தனியே நடத்தப்படுகிறது.

வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே பரிசாக ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. மாணவர்கள் உரிய படிவத்தை பூர்த்தி செய்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்பம் பெற்று போட்டிகளில் பங்கேற்கலாம்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், தமிழ்த்திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல் என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் நடைபெறும்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.


Next Story