சேலம் மேக்னசைட் பகுதியில் பராமரிப்பு பணி:ஈரோடு-மேட்டூர் அணை ரெயில் 4 நாட்கள் ரத்துசேலம்-யஷ்வந்த்பூர் ரெயில் ஓமலூரில் இருந்து இயக்கம்
சேலம் மேக்னசைட் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு-மேட்டூர் அணை ரெயில் 4 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் சேலம்-யஷ்வந்த்பூர் ரெயில் ஓமலூரில் இருந்து இயக்கப்பட உள்ளது.
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அடுத்துள்ள மேக்னசைட் ரெயில் நிலையம் பகுதியில் ரெயில்வே பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி இந்த வழியாக செல்லும் ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு-மேட்டூர் அணை ரெயில் (வண்டி எண்-06407) வருகிற 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 4 நாட்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் மேட்டூர் அணை-ஈரோடு ரெயில் (வண்டி எண்-06408) வருகிற 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் சேலம்-யஷ்வந்த்பூர் ரெயில் (வண்டி எண்-16212) வருகிற 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக ஓமலூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு யஷ்வந்பூர் செல்லும். இந்த ரெயில் சேவை சேலம்- ஓமலூர் இடையே இல்லை.
மேலும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-13352) இயக்கத்தில் 45 நிமிடம் கால தாமதமாகவும், சேலம்-அரக்கோணம் ரெயில் (வண்டி எண்-16088) வருகிற 25-ந் தேதி ரெயில் இயக்கத்தில் 30 நிமிடமும் காலதாமதம் ஏற்படும். இந்த தகவல்கள் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
---