ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நிறைவு...!


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நிறைவு...!
x

ஈரோடு கிழக்கு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 408 வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களூருவில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சரி செய்யும் பணியில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி செய்யப்பட்ட பின்பு இன்று தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த கிழக்கு சட்டமன்ற தேர்தலில் 286 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 286 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 310 சரிபார்ப்பு இயந்திரங்களும் என 882 இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன.


Next Story