ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி 2-வது நாளாக தீவிரம்


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி 2-வது நாளாக தீவிரம்
x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 2-வது நாளாக தபால் வாக்குகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 321 பேரும், மாற்றுத்திறனாளிகள் 32 பேரும் என 353 பேர் உள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடி செல்லாமல், தபால் ஓட்டாக பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.

100 சதவீத ஓட்டை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த, 4-ந்தேதி முதல், இதுபோன்றவர்கள் பட்டியல் பெறப்பட்டு, அவர்களிடம் தனி படிவம் பெறப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் குமரன் தலைமையில் இந்த பணிகள் நடந்தது.

தபால் வாக்குக்காக பதிவு செய்தவர்களிடம், தபால் ஓட்டை பெற நேற்று, 6 குழுக்கள் அமைக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன், அந்த வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று தபால் ஓட்டை பதிவு செய்ய வைத்தனர். மீண்டும் வாய்ப்பு பின்னர் அந்த பெட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டு உள்ளது.

நேற்று வீட்டில் இல்லாதவர்களிடம் இன்று (வெள்ளிக்கிழமை) அவர்களிடம் வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இன்றும் அவர்கள் இல்லை எனில் வருகிற 20-ந்தேதி மீண்டும் வீட்டுக்கு வருவார்கள். அன்றும் அந்த வாக்காளர் இல்லை என்றால், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது.

மேலும் வருகிற 27-ந்தேதி நடக்கும் வாக்குப்பதிவின்போது, அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படாது என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story