சமத்துவ பொங்கல் விழா


சமத்துவ பொங்கல் விழா
x

பென்னிகுயிக் பிறந்தநாளையொட்டி சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

தேனி

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் தியாகத்தை போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில் அவருக்கு தேனி மாவட்டம் லோயர்கேம்பில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பென்னிகுயிக்கின் 182-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி கம்பம் கிரீன்வேலி ரோட்டரி சங்கம் சார்பில், மணிமண்டபம் முன்பு சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மேலும் பென்னிகுயிக்கின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகள், பொதுமக்கள் காளைகளுடன் வந்திருந்தனர்.

பென்னிகுயிக்கின் பிறந்த நாள், அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுவதையொட்டி அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவசாய சங்கத்தினர், பல்வேறு அரசியல் கட்சியினர் பொங்கல் வைத்தும், சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்த உள்ளனர். இதையொட்டி மணிமண்டபத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story