சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம்


சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
x

வள்ளியூரில் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நெல்லை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வள்ளியூர் தெற்கு மெயின் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வெள்ளத்துரை, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரனவன், வள்ளியூர் ஒன்றிய செயலாளர் எட்வின் ஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சாமுவேல் வரவேற்றார்.

கூட்டத்தில் மாநில நிர்வாக ஒருங்கிணைப்பாளரும் மாநில துணை பொதுச் செயலாளருமான சுந்தர் கலந்து கொண்டு கட்சி கட்டமைப்பு வலுப்படுத்துதல், புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் குரூஸ் திவாகர், மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் அமலன் ஆகியோர் பேசினார்கள்.

நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சார்லஸ் ராஜா, நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜேசுதாஸ், களக்காடு ஒன்றிய செயலாளர் பாலசரவணன், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சித்திரைவேல், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அருண்குமார், நாங்குநேரி மேற்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜெயா, திருக்குறுங்குடி நகர செயலாளர் செல்வகுமார், பணகுடி நகர செயலாளர் மைக்கேல் அந்தோணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வள்ளியூர் நகர செயலாளர் தங்ககுமார் நன்றி கூறினார்.


Next Story