கரூருக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாக வரவேற்பு


கரூருக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாக வரவேற்பு
x

கரூருக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கரூர்

உற்சாக வரவேற்பு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் முதல்-அமைச்சராக பதவியேற்று முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை புரிந்தார். இதனையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5.15 மணி யளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக கரூர் வருகை புரிந்தார்.

கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சருக்கு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்கக்கல்பட்டி ஆகிய 4 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கரூர் வெங்கக்கல்பட்டியில் முதல்-அமைச்சர் வருகையையொட்டி இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை வழங்கியும் வரவேற்பு அளித்தனர். இதில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகர பொறுப்பாளர்கள் கணேசன், எஸ்.பி.கனகராஜ், கோல்டு ஸ்பார்ட் ராஜா, சுப்பிரமணியன், அன்பரசன், ஒன்றிய செயலாளர்கள் கோயம்பள்ளி பாஸ்கர், சேகர் என்கிற குணசேகரன் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து வரவேற்பு அளித்தனர். இதனையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கோரிக்கை மனு

இதனைத்தொடர்ந்து பயணியர் மாளிகையில் கரூர் மாவட்டத்திற்குட்ட தொழில் முனைவோர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளிடம் கோரிக்கைகளை கேட்டு, மனுக்களை பெற்றுகொண்டார். நேற்றிரவு பயணியர் மாளிகையில் தங்கினார். இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் பயணியர் மாளிகையில் இருந்து அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய திருமாநிலையூர் மைதானத்திற்கு செல்கிறார். அப்போது அவர் வரும் வழியில் 23 இடங்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

குளித்தலை

திருச்சியில் இருந்து கரூருக்கு நேற்று மாலை காரில் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குளித்தலை அருகே உள்ள மருதூர் பிரிவு சாலை அருகே குளித்தலை எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெரிய பாலம் அருகே உள்ள மேம்பாலத்தின் அருகில் மூதாட்டி உள்ளிட்டவர்களை பார்த்த மு.க. ஸ்டாலின் தனது காரை நிறுத்த சொல்லி அவர்களை சந்தித்து பேசிவிட்டு அங்கிருந்து கரூர் நோக்கிச் சென்றார். இதில், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா, நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. அறிவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணராயபுரம்

கரூருக்கு காரில் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிருஷ்ணராயபுரம் பஸ் நிறுத்தத்தில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி, கிழக்கு ஒன்றிய செயலாளர் உமாபதி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மாயனூரில் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, ஒன்றிய சேர்மன் சுமத்ராதேவி ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story