ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை


ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை
x

நாட்டறம்பள்ளி சென்றாயசாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பகுதியில் அமைந்துள்ள சென்றாயசாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி ஸ்ரீ அய்யப்பா சேவை அறக்கட்டளை சார்பில் சிறப்பு பூஜைகளும் மற்றும் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சென்றாயசாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீ அய்யப்பா சேவை அறகட்டளை தலைவர் ஜி.அன்பழகன் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் வி.பழனி, செயலாளர் பி.சி.சரவணன், பொருளாளர் எ.நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பச்சூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து கலந்து கொண்ட 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

ஸ்ரீ அய்யப்ப சேவை அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய அய்யப்ப பக்தர்களை வருடம் தோறும் தேர்வு செய்து, இலவசமாக பஸ் மூலம் சபரிமலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். மேலும் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் மற்றும் கார்த்திகை மாதம் முழுவதும் தொடர்ந்து காலையில் அன்னதானம் வழங்கி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பச்சூர் ஸ்ரீ அய்யப்பா சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் செய்தனர்.


Next Story