முள்ளம் பன்றியை வேட்டையாடிய என்ஜினீயரிங் மாணவர் கைது


முள்ளம் பன்றியை வேட்டையாடிய என்ஜினீயரிங் மாணவர் கைது
x

ஆறுகாணி அருகே முள்ளம்பன்றியை வேட்டையாடிய என்ஜினீயரிங் கல்லூரி மாணவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

குலசேகரம்,

ஆறுகாணி அருகே முள்ளம்பன்றியை வேட்டையாடிய என்ஜினீயரிங் கல்லூரி மாணவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடி வருகிறார்கள்.

ரகசிய தகவல்

களியல் வனச்சரக அலுவலகத்திற்கு நேற்று காலையில் ஆறுகாணி பகுதியில் உள்ள நிரப்புமுல்லைப்பூ காணி பகுதியில் முள்ளம்பன்றியை வேட்டையாடி ஒரு வீட்டில் வைத்து சமைத்துக் கொண்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் இளையராஜாவின் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர்.

வாலிபர் கைது

அங்குள்ள ஒரு வீ்ட்டில் சோதனையிட்டபோது அங்கு 3 வாலிபர்கள் முள்ளம் பன்றியை துண்டு துண்டாக வெட்டி கறி சமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அதிகாரிகளை கண்டதும் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவர் பிடிபட்டார். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஜோபின் சாம் (வயது 23) என்பதும், முள்ளம்பன்றியை சுருக்கு கண்ணி வைத்து பிடித்து ஒரு வீட்டில் வைத்து கறி சமைக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ஜோபின் சாமை வனத்துறையினர் கைது செய்து மாவட்ட வன குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த ரெஜி மற்றும் ஜெரின் ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

என்ஜினீயரிங் மாணவர்

கைது செய்யப்பட்ட வாலிபர் குமரி மாவட்டத்திலுள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஆறுகாணி பகுதியில் வாலிபர்கள் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கேரள போலீசாருக்கு கிடைத்தது. அந்த தகவலின்படி வாலிபர்களைத் தேடி கேரள மாநில போலீசார் அந்த ்பகுதிக்கு வந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story