பொறியியல் கலந்தாய்வு திட்டமிட்டபடி 10-ம் தேதி நடைபெறும் - தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல்


பொறியியல் கலந்தாய்வு திட்டமிட்டபடி 10-ம் தேதி நடைபெறும் - தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல்
x

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத் தின்கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1 லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கியது.

முதல்கட்டமாக, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில், 668 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் நடைபெறவிருந்த பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு, நீட் தேர்வுகள் முடிவுகள் தாமதம் காரணமாக தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவுக் கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தேதி முதல் நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திட்டமிட்டபடி வரும் 10-ம் தேதி முதல் நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story