ரெயிலில் அடிபட்டு என்ஜினீயர் பலி


ரெயிலில் அடிபட்டு என்ஜினீயர் பலி
x

தென்காசியில் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயர் பலியானார்.

தென்காசி

தென்காசி அருகே உள்ள கடபோகத்தி என்ற கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் மகேஷ் (வயது 30). பொறியியல் பட்டதாரியான இவர் கட்டிட காண்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று மாலை 3 மணிக்கு தனது நண்பர்களுடன் பேசிவிட்டு அருகில் உள்ள தனது தோப்பிற்கு சென்று வருவதாக சென்றுள்ளார். அப்போது அந்த வழியில் ெரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

அந்த நேரத்தில் செங்கோட்டையில் இருந்து நெல்லை செல்லும் பாசஞ்சர் ெரயில் தென்காசி அழுகுணி ஆறு பகுதி அருகே வந்தது. தண்டவாளத்தை கடந்து விடலாம் என்று சென்ற அவர் திடீரென கால் தவறி தண்டவாளத்தில் விழுந்து விட்டார். அவரது உடல் மீது ெரயில் ஏறி அவரது தலை துண்டானது. தகவல் அறிந்த தென்காசி ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றினர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகேசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ெரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story