தஞ்சை அருகே கல்லணையில் நீர்வள ஆதார துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.


தஞ்சை அருகே கல்லணையில் நீர்வள ஆதார துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.
x

தஞ்சை அருகே கல்லணையில் நீர்வள ஆதார துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை அருகே கல்லணையில் நீர்வள ஆதார துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.

ஆய்வு

மேட்டூர் அணையில் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வரும் உபரி நீர் முழுவதும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. காவிரி ஆற்றில் கரையோர பகுதிகளை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து வரும் தண்ணீரை பகிர்ந்து அளிக்கும் கல்லணையை நேற்று மாலை திருச்சி மண்டல நீர்வள ஆதார துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சுற்றுலா பயணிகள்

முக்கொம்பு அணையில் இருந்து கல்லணைக்கு 48099 கன அடி தண்ணீர் வருகிறது. இதில் டெல்டா மாவட்ட பாசனத்துக்கு தேவை போக மிகுதியாக உள்ள தண்ணீர் கொள்ளிடத்தில் 28 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் தண்ணீர் செல்வதை பார்வையிட்ட தலைமைப்போபொறியாளர் தண்ணீரை பாதுகாப்பாக வெளியேற்றவும், பொதுமக்கள் ஆற்றில் இறங்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு கூறினார். மேலும் கல்லணைக்கு தண்ணீர் வரத்து இதே அளவில் நீடித்தால் கல்லணைக்குசுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.ஆய்வின் போது கீழ்காவிரி வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், கோட்டப்பொறியாளர்கள் மதனசுதாகர் (வெண்ணாறு), பாண்டி (கல்லணைகால்வாய்), உதவி செயற் பொறியாளர்கள் சிவக்குமார், மலர்விழி ஆகியோர் இருந்தனர்.


Next Story