மின் சிக்கன குறிப்புகள்


மின் சிக்கன குறிப்புகள்
x

மின் சிக்கன குறிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள வீட்டு மின் நுகர்வோருக்கான மின் சிக்கன குறிப்புகளில் சில வருமாறு:-

*குண்டு பல்புகளுக்கு பதிலாக நட்சத்திர குறியீடு கொண்ட எல்.இ.டி. பல்புகளையும், எல்.இ.டி. குழல் விளக்குகளையும் (டியூப் லைட்) பயன்படுத்தவும்.

*நட்சத்திர குறியீடு கொண்ட பி.எல்.டி.சி. மின் விசிறிகளை 26-36 வாட்ஸ் பயன்படுத்த வேண்டும்.

*ஆளில்லாத இடங்களில் மின் விளக்குகள் எரிவதையும், மின் விசிறிகள் இயங்குவதையும் தடுக்க வேண்டும்.

*நட்சத்திர குறியீடு கொண்ட ஏ.சி.யை (குளிரூட்டி) பயன்படுத்த வேண்டும்.

*ஏ.சி. ரிமோட் கன்ட்ரோல் மூலம் நிறுத்திய பின் ஸ்டெபிலைசர் சுவிட்சை மறக்காமல் அணைக்க வேண்டும்.

*இன்வெர்ட்டர் ஏ.சி.க்கள் குறைந்த மின்சாரத்தை நுகரும்.

*குளிர்சாதன பெட்டியின் கதவுகளை அடிக்கடி திறக்கக்கூடாது. துணி துவைக்கும் எந்திரத்தை முழு கொள்ளளவில் இயக்கினால் மின் சேமிப்பு கிடைக்கும்.

*நட்சத்திர குறியீடு கொண்ட எல்.இ.டி., எல்.சி.டி. டி.வி.க்களை பயன்படுத்த வேண்டும். டி.வி.யை ரிமோட் மூலம் அணைத்த பின்பு, அதன் சுவிட்சை மறக்காமல் அணைக்கவும்.

*கணினி, மடிக்கணினியில் சி.ஆர்.டி. மானிட்டருக்கு பதிலாக எல்.இ.டி., எல்.சி.டி. மானிட்டர்களை பயன்படுத்தவும்.


Next Story