சைதாப்பேட்டை கிளைச்சிறையில் இருந்த இளங்குற்றவாளிகள் 244 பேருக்கு வேலைவாய்ப்பு


சைதாப்பேட்டை கிளைச்சிறையில் இருந்த இளங்குற்றவாளிகள் 244 பேருக்கு வேலைவாய்ப்பு
x

இளங்குற்றவாளிகளை நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு மறு வாழ்வு கொடுப்பதற்காக, பறவை என்ற அமைப்பு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சென்னை,

முதல் முதலாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கி உள்ள 18-வயது முதல், 24 வயது வரையிலான இளங்குற்றவாளிகளை நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு மறு வாழ்வு கொடுப்பதற்காக, பறவை என்ற அமைப்பு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பறவை அமைப்பின் டிராப்-இன் சிறப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறவை அமைப்பின் ஆய்வு கூட்டம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய்ரத்தோர், ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ், தலைமையிட இணை கமிஷனர் கயல்விழி மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.பறவை அமைப்பு தொடங்கப்பட்டது முதல், சென்னை சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த 418 இளங்குற்றவாளிகளும், கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் உள்ள 116 இளஞ்சிறார்களும் கண்காணிக்கப்பட்டனர். அவர்களில் 244 இளங்குற்றவாளிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்பட்டுள்ளது. மேலும் 100 இளங்குற்றவாளிகளுக்கு அவர்கள் ஏற்கனவே படித்து வந்த கல்லூரியில் தொடர்ந்து படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 116 இளஞ்சிறார்களில் 31 பேருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 24 பேர் அவர்கள் ஏற்கனவே படித்த பள்ளியில் படிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மேற்கண்ட ஆய்வு கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டது.


Next Story