இதுவரை நடந்த 68 மெகா முகாம்கள் மூலம்1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு-அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்


இதுவரை நடந்த 68 மெகா முகாம்கள் மூலம்1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு-அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

இதுவரை நடந்த 68 மெகா முகாம்கள் மூலம்1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

இதுவரை நடந்த 68 மெகா முகாம்கள் மூலம்1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். முகாமில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் கனவை நனவாக்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை நடந்த 68 மெகா முகாம்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 760 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 234 தொகுதிகளிலும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் முகாம்கள் நடத்தி வேலைவாய்ப்பை பெற்று கொடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

திறன் மேம்பாட்டு பயிற்சி

நான் முதல்வன் இணையதளத்தை பார்க்க வேண்டும். அந்த இணையதளத்தில் எங்கு படிப்பது, எதை படிப்பது எப்படி படிப்பது, எந்த பயிற்சி நிறுவனத்தில் படிக்க வேண்டும். படிப்பதற்கு, பயிற்சி பெறுவதற்கு எங்கு உதவித்தொகை பெற வேண்டும் என்ற முழுவிவரமும் உள்ளது. முதல்-அமைச்சர் வெளிநாடுகளுக்கு சென்று ஆயிரக்கணக்கான முதலீடுகளை பெற்று கொண்டு வந்து வேலைவாய்ப்பை பெருக்கும் நிலையை உருவாக்கி கொண்டிருக்கிறார். இங்கு 220-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் உள்ளது. வேலையை எடுத்துக் கொண்டால் 30 ஆயிரம் பேருக்கு வேலை உள்ளது. ஆனால் 2 ஆயிரம் பேருக்கு தான் வேலை கிடைக்கும். ஏனென்றால் அந்த நிறுவனங்களுக்கு தேவையான தகுதி, பயிற்சி இல்லை. இதனால் தான் திறன்மேம்பாட்டு பயிற்சி பெற்றால் வேலை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மொத்தம் 1,027 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. திறன்மேம்பாட்டு துறை இயக்குனர் வீரராகவராவ், சப்-கலெக்டர் பிரியங்கா, நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், உதவி கலெக்டர் (பயிற்சி) சவுமியா ஆனந்த், தொழிலக பாதுகாப்பு துறை இயக்குனர் செந்தில் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story