வேலைவாய்ப்பு முகாம்
சங்கரன்கோவிலில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
சங்கரன்கோவில்:
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை சங்கரன்கோவில் வையாபுரி பள்ளியில் நடத்தியது.
தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ் திட்ட விளக்க உரையாற்றினார். நெல்லை வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.
இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, தகுதி உடைய நபர்களை நேர்காணல் செய்து பணி ஆணைகளை வழங்கினர். இதில் பள்ளி செயலாளர் டாக்டர்.சுப்பாராஜ், பள்ளி முதல்வர் சுருளிநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், துறை அதிகாரிகள், தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.