ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சேமநல நிதி வழங்க வலியுறுத்தல்
ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சேமநல நிதி வழங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் கூட்ட அரங்கில் ஓய்வு பெற்ற அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கருப்பையன், விஸ்வநாதன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். மாநில தலைவர் லூயிஸ் பிரான்சிஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சேமநல நிதியை உடனடியாக வழங்க வேண்டும். கோவில் பூசாரிகளுக்கு ஊதிய உயர்வு உயர்த்திய நிலையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பிழைப்பூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஊதியத்தின் வரவு- செலவு தெரிந்து கொள்ள ஜெயங்கொண்டம் பாரத வங்கியில் பதிவு செய்யும் எந்திரம் இருந்தது. அது தற்போது எடுக்கப்பட்டதால் பயனாளிகளின் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பயனாளிகளின் சிரமத்தை குறைப்பதற்கு எந்திரத்தினை மீண்டும் வைக்க வேண்டும்.
வருகிற 6-ந்தேதி மயிலாடுதுறையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு பணியாளர்கள் அனைவரும் கலந்து கொள்வது, ஓய்வு பெற்ற அனைத்து சத்துணவு பணியாளர்களுக்கும் வழங்கப்படும் ஓய்வூதியம், பிழைப்பூதியம் பெறும் குடும்பத்தலைவிகளுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.