விளை நிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்


விளை நிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
x

வத்திராயிருப்பு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் 10 தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் 10 தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

தென்னை சாகுபடி

வத்திராயிருப்பை அடுத்த கான்சாபுரம் அருகே உள்ள அத்திகோவில் மலையடிவாரப்பகுதியில் விவசாயிகள் மா, பலா, தென்னை, தேக்கு உள்ளிட்டவற்றை நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக காட்டுயானைகள் இரவில் தோட்டத்திற்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் இரவு கான்சாபுரத்தை சேர்ந்த விவசாயி ரத்ன வேல்சாமியின் தோட்டத்தில் 3 யானைகள் புகுந்து 10 தென்னை மரங்களை நாசம் செய்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கான்சாபுரம் கிராம நிர்வாக அலுவலர் நாராயணக்குமார், வனவர் கூடலிங்கம் ஆகியோர் யானைகள் சேதப்படுத்திய விளை நிலங்களை பார்வையிட்டு சென்றனர்.

தீவிர ரோந்து

மேலும் யானைகளை கட்டுப்படுத்த வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யானைகள் சேதப்படுத்திய தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அத்திக்கோவில் பகுதியில் கண்காணிப்பு கூடாரம் அமைத்து வனத்துறையினர் தீவிர ரோந்து பணிணை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story